அத்துருகிரிய பிரதேசத்தில் க்ளப் வசந்தவை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (17) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தக் குற்றச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான பச்சைக் குத்தும் நிலையத்தின் உரிமையாளரின் தாயார் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர் இதற்கு முன்னர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.