Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம்  இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள  பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க  அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் அநுராதா ஜயக்கொடியின் வீட்டுக்குச் சென்ற சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா,  ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

எனது கணவர்  புத்தளம் மாவட்டத்துக்கும்  நாட்டு மக்களுக்கும் பெரும் சேவையாற்றினார்.  அவரைத் தேடி வந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share: