![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0008-1024x683.jpg)
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி கப்சோ [GAFSO] நிறுவனத்தினால் நேற்று 11ம் திகதி கிண்ணியா கோவிலடி கடற்கரை முற்றத்தில் நடைபெற்றது.
“எங்கள் கடற்கரைகளை சுத்தம் செய்வதன் மூலமும், மரங்களை நடுவதன் மூலமும், கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி அர்த்தமுள்ள படியை எடுக்கலாம்.” எனும் நோக்கில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதன்போது கடற்கரை சுத்தப்படுத்துதல் மற்றும் மரம் நடுதல் ஆகியவை குறித்த இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கடல் மாசுபாடுதல் மற்றும் காடழிப்பு ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சவால்களை எவ்வாறஎதிர்கொள்ள முடியும் எனும் செயற்ப்பாட்டு கற்கைகள் இங்கே நடந்தேறின.
கப்சோ [GAFSO] வின் திட்டப்பணிப்பாளர் A.J. காமில் இம்டாட் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில்……. [add who ever came – K.M.Anees kinniya UC secretary] மற்றும் கள உத்தியோகத்தர்கள் K.F.மதீனா, S. சுமன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0000-1024x768.jpg)
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0001-1024x683.jpg)
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0002-1024x683.jpg)
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0003-1024x683.jpg)
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0004-1024x683.jpg)
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0006-1024x771.jpg)
![](https://truenation.lk/wp-content/uploads/2025/01/IMG-20250112-WA0010-1024x683.jpg)