புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (16) ஹொரோவ்பதான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதையல் தோண்டும் போது கைது செய்யப்பட்ட பிக்கு அம்பலாங்கொட மத்திட்டிய பிரிவெனாவை சேர்ந்தவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் ஹொரோவ்பதான, மொரவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் 23 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரோவ்பதான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் காணிக்கைகளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.