2024 சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, YAN Sri Lanka எனப்படும் Youth Action Network ஒரு முக்கிய திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் பிரதான நோக்கம், போதைப்பொருள் பாவனையினை தடுத்து சமூகத்தை வலுப்படுத்தவும், சமூகத்தின் கோரிக்கைகளை மதிப்பீடு செய்யவும், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்துவதாகும்.
இந்தப் புதிய முயற்சியின் முதற்கட்டமாக, மது மற்றும் சிகரெட் வரிக் கொள்கையின் நன்மைகளை வாக்காளர்களிடம் எடுத்துக்காட்டி, வேட்பாளர்களின் சுயநலரீதியான உறுதிமொழிகளை வெளிச்சத்தில், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் மக்களின் அவசியமான பங்கை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, YAN Sri Lanka இன் கொழும்பு மாவட்டப் பணிப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் நேற்றையதினம் (12) மருதானை நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் வாயிலாக, மக்களுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமைகள் மற்றும் புதிய வரிக் கொள்கைகளின் அவசியம் பற்றி மேலதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வேட்பாளர்களின் உறுதிமொழிகளை உண்மையுடன் செயல்படுத்துகிறவர்களை ஆதரிக்க வாக்காளர்களை உந்துவதும், சமூகத்தின் நலனில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.