எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் அறிவித்துள்ளார்.
இன்று (10) காலை சுதந்திர ஜனதா சபையின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரித ஹேரத் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் தேசியப்பட்டியலில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அவர் சுயேட்சையாக அரசியலில் ஈடுபட முடிவு செய்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.