கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவை வளாகத்தில் திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள நூலகத்தின் ஒரு பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.