வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் குழியில் விழுந்து ஒரு வயது நான்கு மாத வயதுடைய குழந்தை பலியாகியுள்ளது.
களுகஹகந்துர வெவத்தன்ன பிரதேசத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாய் தேயிலை கொழுந்து பறிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை வீட்டில் உள்ள மற்றுமொரு பிள்ளையிடம் வழங்கிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னர், தண்ணீர் குழியில் விழுந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு ரொபேரியா மருத்துவமனையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தை பதுளை மாகாண பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.