தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலை நிறுத்தங்களை முன்னெடுப்பதனால் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் நிம்மதியான வாழ்க்கை நிலையைச் சீர்குலைப்பதற்காகவே குறித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்விக்கும் எதிர்க்கட்சிகள் பதிலளிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் தற்போதைய தொழில்சார் நடவடிக்கைகளின் படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு கோரப்பட்டுள்ளதாகவும் அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு வருடத்திற்கு சுமார் 280 பில்லியன் ரூபாய் மேலதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.