தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரொபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில்இ தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரொபோ இது என தெரிவிக்கப்படுகின்றது.
தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக குறித்த ரொபோ பணியாற்றி வந்துள்ளது.
ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோ, தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை செய்து கொண்ட ரொபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்த ரொபோவை நகர அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.