முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அதன் தலைவர் லலித் தர்மசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.