Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் 4 சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை வீடியோ எடுத்து அதை வெளியிட்ட தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞன் கௌரவிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட குறித்த வீடியோவால் குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், சந்தேகநபரான குகுல் சமிந்த என்ற சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, அந்த இளைஞனுக்கு 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.

Share: