யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோகிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கஞ்ச கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினரிற்க்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி பகுதியில் சோதனை நடாத்தியுள்ளனர்.
இதன்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்கள் கைவிட்டு சென்றிருந்த 135 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.