வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடி வீ கும்புர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று (11) கைது செய்துள்ளனர்.
வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 3 இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 4,600 மான்செஸ்டர் சிகரெட்டுகளை வைத்திருந்த ராகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.