Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதனால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சந்தையில் கிடைக்கும் தரக்குறைவான சவர்க்காரங்களை பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிச் செல்வதைக் காணமுடிகிறது.

விலைவாசி நுகர்வோரை குறிவைத்து சில குழுக்கள் தரமற்ற குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து சந்தையில் வௌியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரநிலைகள் பணியகத்தால் சான்றளிக்கப்பட்ட குழந்தை சவர்க்காரங்களை வாங்குமாறு​ கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை குழந்தைகள் சந்திக்க நேரிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குழந்தைகளுக்கான சவர்க்காரங்களில் 78% க்கும் அதிகமான TFM இருக்க வேண்டும்.

தரநிலைகள் பணியகம் தேவையான அளவு TFM கொண்ட சவர்க்காரங்களை மட்டுமே அங்கீகரிக்கிறது எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து தரமான சோப்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share: