கல்வி அமைச்சினால் சுகாதார துவாய்களை (sanitary napkins) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் வேலைத்திட்டம் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் நேற்று (06) ஆரம்பமானது.
இந்த திட்டத்திற்காக 1 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த, திட்டத்தின் கீழ் மாணவி ஒருவருக்கு 1200 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்.
வவுச்சர்களை பாடசாலைகள் ஊடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2024ஜூன் முதல் 06 மாதங்களுக்கு சுகாதார துவாய்களை வாங்குவதற்கான வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வறுமை கோட்டின் கீழ் உள்ள பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது