எதிர்வரும் எல்.பி.எல் போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் தமீம் ரஹ்மானை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 05 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டு நீதிமன்றக் காவலில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டுக்கான எல்பிஎல் போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியை தமிம் ரஹ்மான் கொள்வனவு செய்திருந்ததுடன், இச்சம்பவத்துடன் அவரை அந்த உரிமையில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்திருந்தது.