Contact Information
471A, Peradeniya Road, Kandy
SLFP தலைவர் பதவியிலிருந்து மைத்திரி தற்காலிக இடைநிறுத்தம்
- . April 4, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செய்த முறைப்பாடு தொடர்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி
- . April 4, 2024
மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையம் (சிலிண்டர்) சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாடுகளை கடத்திய பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது
- . April 4, 2024
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று காலை சட்டவிரோதமாக 8 மாடுகளைக் கடத்தி செல்லும் போது யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி
- . April 4, 2024
அனுராதபுரம், மஹாஇலுப்பள்ளம, புளியங்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற மின் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வன விலங்குகளிடமிருந்து பயிர் வயலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார்
டொலரின் பெறுமதியில் மாற்றம்
- . April 4, 2024
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(04) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில்
நந்தசேனவுக்கு பதிலாக வீரசேன
- . April 4, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார். அவரின் மறைவுடன் வெற்றிடமாகவுள்ள அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன
தமிதாவும், கணவரும் கைது
- . April 4, 2024
நீதிமன்றத்தில் சரணடைந்த தமிதா அபேரத்னவும், அவரது கணவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் டீல் போட்ட கஞ்சிபானி இம்ரான்
- . April 4, 2024
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கஞ்சிபானி இம்ரான் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். யுக்திய நடவடிக்கை தொடர்பில் பேசுவதற்காக, கஞ்சிபனி இம்ரான் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் அவரது
தமிதாவும், கணவரும் சரணடைந்தனர்
- . April 4, 2024
கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மது போதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி
- . April 4, 2024
மாத்தறை வெலிகம பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் (02) கணவர் குடிபோதையில்