பாரளுமன்றத்திற்கு நாம் புதியவர்களாக இருந்தாலும், இங்கு அதிகமானவர்கள் 20, 25 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர்கள். கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவிப்பு
இம்முறை பாராளமன்றம் செல்லும் வேட்பாளர்கள் புதியவர்கள் இவர்களால் என்ன செய்து விட முடியும் என நீங்கள் நினைக்கலாம்! பாரளுமன்றத்தில் நாம் புதியவர்களாக இருந்தாலும், இங்கு அதிகமானவர்கள் 20, 25 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அது மட்டுமல்லாது எம்மில் பல கல்விமான்களும், பல துறைகளில் கற்ற துறைசார் நிபுனர்களும் இருக்கிறார்கள் ,
எனவே நீங்கள் யாரும் ஏவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை நாம் நிச்சியமாக இந்த நாட்டுக்கும், கண்டி மாவட்டத்துக்கும் பல நல்ல விடயங்களை ஜனாதிபதியுடன் இனைந்து முன்னெடுப்போம்.
அதே போன்று ஜனாதிபதி தெரிவு செய்து 3 4 வாரங்கள்தான் ஆகின்றன அதனுல் இனவாதம் இல்லை, ஊழல் இல்லை, நீதித்துறை சரியாக இயங்குகிறது!
இவைகளைப் பார்க்கும் போது குருகிய காலப்பகுதியில் நாட்டு மக்களால் ஒரு மாற்றத்தை உணர முடிகிறது
எனவே நானும் இக்கட்சியில் 20 வருட கால அரசியல் அனுபவம் கோண்டவன் மற்றும் பல துறைசார் விடயங்கள் கற்றவன் என்ற வகையிலும் இம்முறை கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியினூடாக திசைகாட்டிச் சின்னம் 11ம் இலகைகத்தில் போட்டியிடுகிறேன்.
எனவே எனக்கும் ஒரு விருப்பு வாக்கை அளித்து என்னையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என கடுகண்ணாவ, குருகுத்தல மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
Contact Information
Share: