Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் டாக்டர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த குருநாகல் நீதவான், வழக்குக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், பிரதிவாதியான டாக்டர் ஷாபியை தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், கலாநிதி ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டில், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாகக் கூறி டாக்டர் ஷஃபி கைதுசெய்யப்பட்டார். அவர் அறுவைசிகிச்சை பிரசவத்தின்போது சிகிச்சை பெற்ற பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக பல்வேறு தரப்பினரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பின்னர் அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைதுசெய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியில், குருநாகல் போதனா வைத்தியசாலையிலும், தம்புள்ளை பொது வைத்தியசாலையிலும் வைத்தியர் ஷாபியினால் சிகிச்சை பெற்றதாகவும், கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் கூறிய தாய்மார்களினால் பெருமளவான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Share: