Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முஸ்லிம்களின் மார்க்க சட்டங்களில் தேவையில்லாத கருத்துக்களையும்,ஏனைய விடயங்களில் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்கள் என்பதும் அவ்வாறான நபர்களும் இம் முறை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலையில் முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணமாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது.

நாடு இன்னும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடாத சூழ்நிலையில், வெளிநாடுகளின் ஆதிக்கமும் இலங்கையில் இருக்கும் என்பது தெளிவாக இருக்கும் நிலையில், வெளிநாடுகளை திருப்தி படுத்த அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படும் போது நாடு,மக்கள்,சமூகம் என பாதிப்புகளுக்குள்ளாகலாம் அப்போது எமது உரிமைகளைப் பாதுகாக்கவும், சூழ்நிலையை தைரியமாகவும், சாணக்கியமாகவும் கையாள்வதற்கு அரசியல் அனுபவமிக்க, சட்ட அறிவு கொண்ட, சர்வதேச உதவிகளை பெறக்கூடிய, அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய, நமக்காக நடுநிலையான சகோதர  இனத்தைச் சேர்ந்தவர்களை குரல் கொடுக்கச் செய்யும் தலைவரான ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற பிரவேசம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளலாம்.

எனவே, சிலரை திருப்தி படுத்தவும்,காழ்புணர்ச்சி காரணமாகவும்  ரவூப் ஹக்கீமை தோற்கடிக்க சிலர் கண்டியில் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி ரவூப் ஹக்கீம் என்ற தனி நபரை தோற்கடிக்கும் முயற்சியல்ல ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தோற்கடிக்கும் முயற்சி என்பதை புரிந்து கொண்டு, தனக்கு என சிந்திக்காது சமூகத்திற்கு என்று சிந்தித்து சதிகளை முறியடித்து ரவூப் ஹக்கீமின் வெற்றியை உறுதிப்படுத்த டெலிபோன் சின்னம் 2 ஆம் இலக்கத்திற்கு புள்ளடி  இடுவோம்.

Share: