இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.