Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் Nitish Kumar அதிகபட்சமாக 30 ஓட்டங்களையும் Corey Anderson 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Chris Jordan 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Jos Buttler 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Share: