அனுராதபுரம் – மிஹிந்தலை இடையே இலவச சிறப்பு ரயில்கள் சேவையை நேற்று (17) முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொசொன் போயாவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இந்த இலவச ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து மஹவ நோக்கி ரயிலில் வரும் பயணிகளுக்காக மஹவ ரயில் நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.