நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் குழாய் ஒன்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.