சவுதி அரேபியாவின் மக்காவில் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்ற 14 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஜோர்டான் பிரஜைகள் எனவும், மேலும் 17 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹஜ்ஜுக்கு சென்ற ஈரானிய யாத்திரிகர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்ட போதிலும், அவர்களின் மரணத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த வார வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று சவுதி தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அய்மன் குலாம் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
சவூதி அரேபிய சுகாதார அமைச்சு, யாத்திரிகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்ததது.
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் சுமார் 240 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.