மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது முதல் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ளார்.
இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மலோனியின் அழைப்பின் பேரில் G7 நாடுகளின் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜி7 நாடுகளின் 50வது உச்சி மாநாடு இத்தாலியின் புக்லியாவில் இன்று (14) நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் போது இத்தாலி பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது இதுவே பதினொன்றாவது முறையாகும். பிரதமர் மோடி தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாநாட்டில் பங்கேற்கிறார்.