Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அம்மாணவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர் மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் நெதுசர பிரியனந்த எனும் 12 வயதுடைய மாணவன் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர் மதுரங்குளி நகரை அண்மித்த நவகம்மானய பகுதியில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் காணாமல் போன போது வெள்ளை நிற சேட்டும், நீல நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

காணாமல்போன மாணவன் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் உடனடியாக 0322268221 எனும் பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0718592927 எனும் பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.கே.காமினி விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

Share: