Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை, அவர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2006 ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், ‘நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.

இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின் போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என பதவிட்டுள்ளார்.

Share: