Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று (14) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபருடன் சுமார் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பை பேணிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபருடன் சில காலம் ஒரே வீட்டில் வசித்து வந்த சிறுமி, அவரின் தொல்லை தாங்க முடியாமல்சில வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் தன்னிடம் மீண்டும் வருமாறு அந்த நபர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியை மிரட்டியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு (14) குறித்த சிறுமியும் அவரது தாயாரும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது, சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் சிறுமி பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

Share: