Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன “அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்” என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடைசி காலாண்டிற்குப் பிறகு, இந்த நாட்டில் பொருளாதாரச் சுருக்கம் குறைந்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாறும் திறனைப் பெற்றுள்ளோம். நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே எமது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஆனால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறையும் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

அதன்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. “முட்டி உடைத்தல் குருடர்களுக்கு உணவளித்தல்” என்ற அம்சங்கள் சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, “அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல்” என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தாண்டு விழாக்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த ஆண்டு இதுவரை 635,784 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன் மூலம் நாடு 1025 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது.

10,000 குடும்பங்களுக்கு கிராமத்தில் கோழிப்பண்ணை உற்பத்தி மையங்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே மாதம் இத்திட்டத்தை ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன என்தைக் கூற வேண்டும். அதற்கான கடன்களும் உதவிகளும் வழங்கப்பட உள்ளன. தேயிலை பயிர்ச்செய்கைக்காக 14,000 குடும்பங்களுக்கு தேயிலைச் செடிகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கு இலவச தேயிலை செடிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏனைய குடும்பங்களுக்கு 36% ஆக இருந்த வட்டியைக் குறைத்து 12% சலுகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், பெண்கள் “லிய சவிய” திட்டத்துடன் இணைந்து, எதிர்வரும் மே மாதம் முதல் எந்த ஒரு உற்பத்திக்கும் 12% வட்டியில் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்” என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.

Share: