Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஹட்டன் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த வேன் மீது மரக்கிளை ஒன்று விழுந்துள்ளது.

எனினும் இந்த விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உயிர் தப்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (07) இரவு 7.30 மணியளவில் திக் ஓயா, படல்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மார மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், பிரதான வீதியின் குறுக்கே டெலிபோன் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்த கம்பமும் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் 30 நிமிடங்களுக்கு முற்றாக தடைப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share: