Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மட்டக்களப்பு- களுவன்கேணி பிரதேசத்தில் கருநாக பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான சின்னத்தம்பி கற்பகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டிற்கருகிலுள்ள தனது காணியைத் துப்பரவு செய்துகொண்டிருந்தவேளை குப்பைக்குள் மறைந்திருந்த கருநாகபாம்பு தீண்டியுள்ளதுடன், சற்று நேரத்தில் அவர் மயங்கியுள்ளார்.

இவரை சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

திடீர் மரண விசாரணையதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

இதன்போது கனைக்காலில் பாம்பின் பற்கள் பதிந்திருந்தமை அவதானிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share: