Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கடுவெல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (27) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொத்தலாவல – கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், ​​வீட்டிற்குள் தலையில் காயத்துடன் தரையில் கிடந்த நிலையில் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கடுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share: