Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இது சாதனை படைத்துள்ளது.

அதனடிப்படையில் இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோயல் செலன்ஜர்ஸ் பெங்ளூர் அணி அடித்த 263/5 என்ற ஓட்டங்களை 11 ஆண்டுகளுக்கு பின் சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி முறியடித்துள்ளது.

துடுப்பாட்டத்தில் சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி சார்ப்பில் விளையாடிய டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் அதிரடியான ஆட்டத்தை வௌிப்பட்டுத்திய கிளாசன் ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

278 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் அதிரடியாக போட்டியை ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும் மும்பை இந்தியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்ப்பில் திலக் வர்மா 34 பந்துகளில் 64 ஓட்டங்களையும் டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் மேலும் பல சாதனைகள் தகர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனப்படையில் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து 38 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர் அடித்த ஐபிஎல் போட்டி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதனூடாக கடந்த 2021 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சாதனையும் தகர்க்கப்பட்டது.

அத்துடன் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தம் 523 ஓட்டங்களை எடுத்திருந்ததுடன் ஐபிஎல் போட்டி ஒன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒரே போட்டியில் நான்கு துடுப்பாட்டக்காரர்கள் 25 பந்துகளுக்கும் குறைவாக அதிவேக அரை சதத்தை பதிவு செய்த போட்டியாகவும் இது பதிவாகியுள்ளது.

Share: