இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தகமொன்று நாளை(23) மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது.
இந்த வரலாற்று ஆய்வு நூல் புத்தகமானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வானது நாளை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள அஞ்சனா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஈஸ்டர் படுகொலைகள் மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள மேற்படி நூலில் இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நெறுங்கிய தொடர்பிலிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபயவும் அண்மையில் புத்தகமொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.