Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையுடன் நீர் பாவனை 10 தொடக்கம் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கண்காணிப்பு அமைப்பின் கீழ் 16 நீர் விநியோக அமைப்புகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பேருவளை, அளுத்கம, நிவித்திகல, நாரம்மல, கம்போலவத்தை, புஸ்ஸல்லாவ, அங்கும்புர, மீவதுர, புஸ்ஸெல்ல, ரத்தோட்டை, ஹட்டன், கொட்டகலை, ஊருபொக்க, புத்தல, சூரியஹார ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதேவேளை, வாத்துவை, எஹெலியகொட மற்றும் ரதம்பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்போது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால், அந்த பகுதிகளுக்கு பௌசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் பற்றாக்குறை மற்றும் குறைந்த அழுத்தம் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.

இதன் காரணமாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரை பயன்படுத்த வேண்டாம் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் மேலும் கோரியுள்ளது

Share: