இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட புகையிரத பயணிகள் மற்றும் அரச ஊழியர்களின் புகையிரத பயணச்சீட்டு முன்பதிவு செயல்முறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலின் கீழ் இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட் மற்றும் இ-ரயில் பாஸ் முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த புதிய முறையின் கீழ், பொதுவான ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புதிய இ-டிக்கெட் முறையைப் பயன்படுத்தி மிக எளிதாக ஆன்லைனில் டிக்கெட் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறையின் கீழ், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வழங்கும் ரயில்வே உரிமத்தை மின்னணு ரயில்வே பாஸாக முன்பதிவு செய்யும் வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.