Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்ட பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 2,400,000 ஆக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவுகள் சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share: