உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
நாட்டில் குறிப்பிடத்தக்க நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடனேயே தாம் 2020 =ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின் ஊடாக அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனது அனைத்து எதிர்பார்ப்புகளும் பொய்யாக்கப்படும் வகையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களின் போது, இளம் தலைவர் என்ற வகையில் செயற்படுவதற்கு தனக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக தான் தற்காலிகமாக அதிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக உத்திக பிரேமரத்ன சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.