கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் பெற்றோரிடம் இருந்து தனது 7 வயது மகனை பயன்படுத்தி கைப்பேசிகளை திருடிய தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வரவில்லையென்றால் தாய் தன்னை அடிப்பதாகவும், தான் கொண்டு செல்லும் கைப்பேசிகளை தந்தையிடம் கொடுப்பதாகவும் அவர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான பெண் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.