Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு 54 நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

12 பாடசாலைகள், 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 2 நிறுவனங்களிடமிருந்து 8 திறந்த முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வீதி விபத்துக்கள் அடிக்கடி நிகழும் பகுதிகளுக்கான தீர்வுகள் அவற்றில் அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சாரதி பயிற்சி நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜித் தென்னகோன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன் பயிற்சி மற்றும் எழுத்துப் பரீட்சையின் அவசியம் குறித்தும் சாரதி பயிற்சி நிலையங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share: