Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் திருவிழாவை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் இலங்கையில் இருந்து 4454 பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்திய பக்தர்கள் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Share: