Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை விநியோகிக்கும் 04 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த வர்த்தக நிலையங்களில் 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த கிரீம் வகைகளை விற்பனை செய்த 04 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் சருமத்தை விரைவாக வெண்மையாக்கும் என கூறி குறித்த கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடைசெய்யப்பட்ட கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த 04 வர்த்தகர்களும் நீண்டகாலமாக பாரியளவிலான கிரீம்களை இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Share: