Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 லட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கும் பணி பெப்ரவரி 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த முறை தெரிவு செய்யப்படாத நிலையில், மேன்முறையீட்டு செய்யாதவர்கள் மற்றும் முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறாதவர்களுக்கும் மீண்டும் தகவல் உறுதி செய்ய அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, உதவித்தொகை பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் முறையின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் அளவுகோலின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் சமமாக பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

மேலும், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு 7500 ரூபாவாகவும் முதியோர் கொடுப்பனவை 3000 ரூபாவாகவும் கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share: