Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரோன் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன. இலங்கை மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, தடுப்பூசியால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், புதிய நோய் தொற்றை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “நாடுகள் மே மாதத்திற்குள் ஒரு புதிய தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அனைத்து நாடுகளில் புதிய தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. டிசீஸ் எக்ஸ் (Disease x) என்று குறிப்பிடும் புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த டிசீஸ் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய நோயாகும். இதனை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருங்கள். கொரோனா தொற்றின்போது பல உயிர்கள் இழந்தோம். அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், போதுமான ஒக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் இல்லை. அதேபோல, அனைத்து நாடுகளிலும் சமமான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இது அனைத்து நாடுகளிலும் ஒரு தீவிர பிரச்னையாக உள்ளன” என்றார்.

Share: