Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீடு உடைக்கப்பட்டு, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளன என தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்ல விக்ரமசிங்க புரவில் உள்ள இரண்டு மாடி வீடே உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  திருடப்பட்ட பொருட்களில் வீட்டின் அலுமாரியில் இருந்த 1,50,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கைக்கடிகாரம்,  தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள் 8, உலருணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பை என்பன உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் தன்னுடைய கணவனுடன் கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போதே, ​​வீடு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.   

முன் கண்ணாடிக் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவரான வர்த்தகர்,  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share: