அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேனநாயக்க சமுத்திரத்தின் நீரின் கொள்ளளவு இன்று (10) பிற்பகல் வரை உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொல்வத்தை, பஹலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.