Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின் ஊடாக சாமதானம்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒற்றுமை , சகோதரத்துவம், தலைமைத்துவ பண்புகள் என்பன வற்றை மேலோங்க செய்ய இவ் விளையாட்டு போட்டி கடந்த சனிக்கிழமை (25.01.2025) அன்று இடம்பெற்றது. இதன்போது பரிசில்கள், நினைவு சின்னக்கள் என பல்வேறு விடயங்கள் நடந்தேறின.

ஜப்பான் அரசோடு இணைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் எலயன்ஸ் டிவலப்மன்ட் டிரஸ்ட் (ADT) நிறுவனங்களின் நிதி உதவியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கப்சோ [GAFSO] வின் திட்டப்பணிப்பாளர் A.J. காமில் இம்டாட் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் மத குருமார்கள் மற்றும் கப்சோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share: