பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையிலான மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித்த ஹேரத் (09) பார்வையிட்டார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த வீதியின் அவசியம் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்த வீதிப் பிரிவின் பணிகளை முடிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் படி கலகெதர வரையிலான முழு திட்டத்திற்கான மதிப்பீடு 210 பில்லியன் ரூபாவாகும்.
இந்த 4 வழிப்பாதையானது பொதுஹெரவிலிருந்து கலகெதர வரை 32.4 கிலோமீற்றர் ஆகும்.